Friday, June 13, 2014

சுய நினைவு இல்லாத நான் அன்று எனது கற்பையும் இழந்தேன் ! காதல் மன்னனிடம் ஏமாந்தது எவ்வாறு : பெண் பரபரப்புப் புகார்!!

பல பெண்களை ஏமாற்றி காம லீலைகள் புரிந்த காதல் மன்னனால் எவ்வாறு ஏமாற்றப்பட்டார் என்பது குறித்து ரெஜினா என்ற பெண் பொலிசில் புகார் மனு ஒன்றினை அளித் துள்ளார். மதுரை மாவட்டம் ஆனையூர் முடக்கத்தான் நகரை சேர்ந்த சந்திரமோகன் மகள் ரெஜினா (23) பி.கொம். பட்டதாரி. இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர், தாய் அனார்கலி. இவரது சகோதரி கோபிலட்சுமி. திண்டுக்கல் பாலகிருஷ் ணாபுரத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், நான் திண்டுக்கல்லுக்கு எனது அக்காவை பார்க்க அடிக்கடி வருவேன். அப்போது ஒரு முறை எனது அக்காவுடன் கடை வீதியில் வந்துகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் என் மீது மோதுவது போல் வந்தார். அவரை சத்தம்போட்ட போது சிரித்துக்கொண்டே என்னை பின் தொடர்ந்தார்.

அதன் பிறகு நான் வீட்டிற்கு வரும்வரை மோட்டார் சைக்கிளில் வந்து வீட்டை அடையாளம் கண்டு பிடித்தார். இதனையடுத்து தினசரி நான் இருக்கும் வீட்டிற்கு வந்து தனது ரோமியோ விளையாட்டை காட்ட ஆரம்பித்தார். தனது பெயர் பொன்சிபி என்றும், தான் பொறியியல் முடித்திருப்பதாகவும், முதலில் என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். அதன் பிறகு எனது கைப்பேசி எண்ணை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டார். பின்னர், என்னை காதலிப்பதாக கூறிய அவரிடம், இதற்கு சம்மதிக்காததால் அவரது கையை பிளேடால் கீறிக்கொண்டு நீ என்னை காதலிக்காவிட்டால் நான் இறந்து விடுவேன் என்ற கூறினார்.

இதனால் என் மனம் இளகியதால், அவருடன் நட்புடன் பழக ஆரம்பித்தேன். இந்த நட்பு சென்று கொண்டிருந்த நேரத்தில் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பொன்சிபி என்னிடம் கூறினார். அவரது அம்மாவிடம் சம்மதம் வாங்குவதற்காக பாலகிருஷ்ணாபுரம் ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார். அங்கு சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. உனது அம்மா எங்கே என்று கேட்டபோது இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறி எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்தபிறகுதான் எனக்கு ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்தேன்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தது எனக்கு தெரிய வந்தது. சுய நினைவு இல்லாத நான் அன்று எனது கற்பையும் இழந்தேன். பின்னர் எனது வாழ்க்கையை இப்படி செய்து விட்டாயே என்று நான் அவரிடம் கதறியபோது நாம்தான் திருமணம் செய்து கொள்ளபோகிறமே அதற்கு இதுதான் ஆதாரம் என்று சமாதனம் செய்தார். பின்னர் நான் எனது வீட்டிற்கு வந்து விட்டேன். சில நாட்கள் கழித்து என் வீட்டிற்கு வந்த அவர் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அதற்கு நான் மறுக்கவே சுயநினைவு இல்லாமல் இருந்த என்னிடம் பொன்சிபி உல்லாசமாக இருந்ததை காணொளி படம் எடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதை காட்டி என்னை மிரட்டினார்.

இதனால் நான் சுதாரித்துக் கொண்டு முதலில் நமக்கு திருமணம் நடக்கட்டும் என்று உறுதியாக கூறவே, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரது முன்னிலையில் பெருமாள் கோவிலில் என் கழுத்தில் அவர் தாலி கட்டினார். திருமணம் ஆகி 2½ மாதங்கள் வரை நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தும் எங்கள் திருமணம் பொன்சிபியின் தாயார் ஹேமாமாலினிக்கு தெரிய வரவே அவர் என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டினார். அதன் பிறகு பொன்சிபியும் தனது சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தார்.

தினமும் அவரது நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து மது அருந்துவார். இதை நான் தட்டிக்கேட்டபோது தினமும் எங்களுக்குள் தகராறு நடக்கும். அவ்வாறு ஒருநாள் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் மட்டையால் எனது வயிற்றில் ஓங்கி அடிக்கவே 3 மாத கரு கலைந்தது. வலி தாங்க முடியாமல் நான் அழுததை கூட அவர் பொருட்படுத்தவில்லை. இதனால் நான் எனது தாய் வீட்டிற்கு வந்தேன். ஆனால் அவர்களும் என்னை வீட்டில் சேர்க்கவில்லை.

பொன்சிபியிடம் நியாயம் கேட்டபோது இனிமேல் நீ வீட்டிற்கு வரக்கூடாது என்று அவரது நண்பர்களை வைத்து மிரட்டினார். இதைவிட மிகப்பெரிய ஆச்சரியமாக என்னைப்போல் பல பெண்களை ஏமாற்றி கற்பை சூறையாடியது எனக்கு பிறகுதான் தெரிய வந்தது. இதனால் எனக்கு நியாயம் கேட்டு திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையம், தாலுகா காவல் நிலையங்களில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்ததால் என்னை தீர்த்துகட்ட சதி நடக்கிறது. எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே என்னை ஏமாற்றிய பொன்சிபி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com