காணமல் போன மாணவிகள் நானுஓயா காட்டுப் பகுதியில் இருந்து மீட்பு!
காணமல் போனதாக கூறப்பட்ட 2 பாடசாலை மாணவிகள் நானுஓயாவிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த மாணவிகள் இருவரும் பாடசாலைக்கு சென்று வீடு திரும்புகையில் நேற்று மாலை காணமல் போயிருந்ததாக கிடைத்த முறைப்பாட்டு அமைய, பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, மாணவிகள் இருவரும் கடத்தப்பட்டிருந்தார்களா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment