Wednesday, May 21, 2014

யாழிலிருந்து மேலும் 32 பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்!

இராணுவத்தின் மகளிர் படையணியில் பல பிரிவுகளில் காணப்படும் 700 வெற்றிடங்களை நிரப்புவதற்காக, புதியவர்களை தெரிவு செய்யும் நேர்முக பரீட்சை நேற்று யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக் வலயத்தில் இடம்பெற்றது.

இந்த நேர்முக பரீட்சைக்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் அழைக்கப்பட்டு அவர்களில் 32 பேரும் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 வயதிற்கு மேற்பட்டவர்கள் இராணுவத்தின் தொண்டர் படையில் உள்வாங்கப்படவுள்ளதுடன் அவர்கள் இராணுவத்தில் சேவையாற்றும் காலத்தில் இராணுவ சம்பளம் கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளை பெற்றுக் கொள்ள உரிமை பெற்றவர்கள்.

இராணுவத்தின் தொண்டர் படையில் சேவையாற்றும் இவர்கள் வருடாந்ந சம்பள உயர்வுடன் கூடிய சம்பளத்தை பெறுவதுடன் 22 வருட சேவையின் பின்னர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன் மகளீர் படையினர் 15 வருடசேவையின் பின்னர் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெரும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் வழங்கப்படவுள்ள இந்நியமணங்கள் பொறியியல், பிளம்பிங், வெல்டிங், வாகன இயக்கவியல், கட்டட நிர்மானம், கலாச்சார நடனம், விவசாயம் மின்னியல் நிபுணத்துவம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற பயிற்றுனர்களினால் 3 மாத கால பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன் இக்காலப்பகுதியில் பயிற்சிக்கான கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.மேலும் பயிற்சி நிறைவு பெற்றதன் பின்னர் சான்றிதகளும் வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கான பயிற்சிகள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள பெண்கள் பயிற்சிக் கல்லூரியில் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ். மாவட்ட இராணுவ ஊடகப்போச்சாளர் ரஞ்சித் மல்லவராச்சி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com