Wednesday, May 21, 2014

கொக்கிக் கை தீவிரவாதிக்கு 100 ஆண்டுகள் சிறை! - அமெரிக்கா!

கொக்கி கை தீவிரவாதிக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எகிப்து நாட்டைச் சேர்ந்த 56 வயதுடைய அபு ஹம்சா அல்-மஸ்ரி இவர் படிப்புக்காக லண்டனில் குடியேறி அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு விபத்தில் 2 கைகள், ஒரு கண் பார்வையை அபு ஹம்சா இழந்தார். அதன் பின்னர் அவர் தனது ஒரு கையில் இரும்பிலான கொக்கியை அணிந்தார்.

1990- களில் வடக்கு லண்டனில் உள்ள பின்ஸ்பரி பார்க் மசூதியில் இமாம் ஆகப் பணியாற்றிய அபு ஹம்சா அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாசவேலை களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் 2012-ல் அவர் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

யேமன் நாட்டில் 4 வெளிநாட்டினரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்த சம்பவம், அமெரிக்காவின் ஓரிகானில் அல்-காய்தா தீவிரவாத பயிற்சி மையத்தை அமைக்க ஆள்களை அனுப்பியது, ஆப்கானிஸ்தா னுக்கு தீவிரவாதிகளை பயிற் சிக்கு அனுப்பியது உள்பட அபு ஹம்சா மீது 11 வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணை நியூயார்க் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 11 வழக்குகளிலும் அபு ஹம்சா குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 100 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com