எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையக அமைந்திருந்த கடற்பரப்பிலிருந்து ஹெலிகொப்டரின் சிதைவுகள் மீட்பு!
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையகம் அமைந்திருந்த முல்லைத்தீவு, சாளை கடற்பரப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகொப்டரின் சிதைவுகளில் உப்பு கலந்திருப்பதால் அதனை உடனடியாக அடையாளம் காண முடியாதுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
எவ்வாறாயினும், யுத்த காலத்தின் போது காணாமல் போன, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமாக ஹெலிகொப்டரொன்றின் பாகங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று நம்புவதாக அவர் கூறினார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், கடற்புலிகளின் முகாம் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்காக எம்.ஐ 24 மற்றும் எம்.ஐ 17 ரக தாக்குதல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறானதொரு நிலையில், இன்று கடலிலிருந்து மீட்கப்பட்ட ஹெலிகொப்டரைப் பொருத்தவரையில், அது சுமார் ஐந்து வருடமாவது கடலுக்கடியில் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment