இலங்கையில் தனி இராச்சியத்தை அமைக்க முயற்சிக்கும் 426 பேரின் சொத்துகள் முடக்கம்!
இலங்கையில் தனி இராச்சியத்தை ஏற்படுத்தும் நோக்கில் 16 வெளிநாட்டு அமைப்புகளை சேர்ந்த 426 பேரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், கடந்த 22ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட குழுக்கள் மற்றும் நபர்களின் உள்நாட்டு நிதி உட்பட சொத்துகளும், பொருளாதார சொத்துகளும் முடக்கப்படும். 2001ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு ஏற்ப, இவ்வமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய புலி செயற்பாட்டாளரான நெடியவன் உட்பட 430 பேர், உள்நாட்டு பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக தேடப்படுவோர் பட்டியலில், உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி, புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இதில் அவ்வமைப்புகள் மற்றும் சொத்துகளை முடக்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைகள், மத்திய வங்கியின் நிதிச்சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment