ஜனாதிபதி மஹிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ உட்பட பலர் கைது!
இன்று இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள உள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லியில் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ உட்பட அவரின் ஆதரவாளர்கள் சற்றுமன்னர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் இன்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அங்கு எவ்வித ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்த அனுமதி இல்லை என்றும், அதையும் மீறி யாரேனும் போராட்டம் நடத்தினால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று புதுடெல்லி பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும் இலங்கை ஜனாதிபதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜந்தர் மந்தரில் ம.தி.மு.க சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ம.தி.முக. அறிவித்திருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோவும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment