பிரபாகரனை வேறொடு சாய்த்த நாளை கொண்டாடலாமா? ஐநா ஆராய்ந்து சொல்வதாய்ச் சொல்கிறது!
மூன்று தசாப்த யுத்த முடிவின்போது, இறந்த புலிகளை நினைவு கூருவதற்காக, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொலை செய்யப்பட்ட மே 18 ஆம் திகதி வெள்ளமுள்ளிவாய்க்காலில் நினைவு விழா கொண்டாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆராய்ந்து பார்க்கவுள்ளதாக கூறியுள்ளது.
அவ்வமைப்பின் ஊடகச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீவன் ட்ரஜெரிக் குறிப்பிடும்போது, இது தொடர்பிலான அறிக்கையை இதுவரை தான் காணவில்லை எனவும், என்றாலும் அதுதொடர்பில் தேடிப்பார்க்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் யுத்தம் நடைபெற்று இறுதித் தருவாயில் இறந்த தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எவரும் தனிப்பட்ட முறையில் நினைவு கூர முடியும் எனவும், என்றாலும் அதற்காக பாரிய அளவில் விழாக்களை ஏற்பாடு செய்ய முடியாது எனவும், புலிக் கொடிகளை காட்சிப்படுத்தக் கூடாது எனவும் இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
பிரபாகரனைக் கொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டுவந்த இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் இறுதிக் கட்டப் போரில் 40,000 அப்பாவித் தமிழ் மக்கள் இறந்துள்ளார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment