இலங்கை அகதிகள் பிரபாகரனின் நினைவாக எவ்வித நிகழ்வுகளையும் நடாத்த கூடாது! - இந்தியா
எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரனின் நினைவாக எவ்வித நிகழ்வுகளையும் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மேற்கொள்ளக்கூடாது என்று இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அகதிகளுக்கு இந்திய கரையோர காவல்துறையினராலேயே இவ்வாறு அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர். நினைவு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுமானால் அது எதிர்காலத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று கரையோர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, புதிதாக எவரினதும் நடமாட்டங்கள் இருக்குமானால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கரையோர காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் 454 குடும்பங்கள் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
0 comments :
Post a Comment