Wednesday, May 14, 2014

இலங்கை அரசாங்கத்தின் தடைவிதிப்பால் புலம்பெயர் அமைப்புக்களுக்கு இடையே பாரிய பிளவு!

இலங்கையில் விதிக்கப்பட்ட தடையின் பின்னர் வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புக்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணி வரும் குற்றச்சாட்டில் புலம்பெயர் தமிழர்களின் 16 அமைப்புக்களுக்கும் 424 தனிப்பட்ட நபர்களுக்கும் இலங்கை அரசாங்கம் அண்மையில் தடை விதித்தது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பை ஆதாரம் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தடையின் பின்னர் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comments :

Anonymous ,  May 14, 2014 at 9:56 PM  

LTTE Terrorists mafia nett work have problem to get in to the UN. This is the main and Tamil Naadu LTTE Politiciens like Y.K,Nedumaran,Seeman,Ramadas,Sathiyaraj,Sarathkumar,Thirumavalavan, Kasi Anandan porukki etc coult not, can be/have a links with LTTE terrosit binami nett works all over the world.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com