யாழில் இளம் குடும்பஸ்தருடைய சடலமாக மீட்பு!
யாழ்-அச்செழுப் பகுதி வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. அச்செழுவை சேர்ந்த யோகராசா ஜெயதாஸ் (வயது 23) என்ற இளம் குடும்பஸ்தருடைய சடலமே வீட்டின் அறை ஒன்றில் இருந்து இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று இரவு நித்திரைக்கு செல்ல முன்னர் வீட்டாருடன் உரையாடிவிட்டு சென்றதாகவும், பின்னர் காலையில் பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக வீட்டார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment