Wednesday, May 21, 2014

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோல்வியைத் தழுவியுள்ளது.

பிரேரணைக்கு எதிராக 151 வாக்குகளும் ஆதரவாக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரேரணை இன்று (21) இரண்டாவது நாளாக விவாத்த்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என்பன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஜாத்திக்க ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி என்பன வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  May 21, 2014 at 10:57 PM  

How it possible the minority against majority in Sri Lanka Parliament?
The majority government members are already famous for supper corruption.
Most of them are notorious mafias.
It's waste of time..

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com