Wednesday, May 21, 2014

ஜனாதிபதி மஹிந்தவை அழைத்தது இந்தியா! மோடியின் பதவியேற்பு விழாவில் பங்குகொள்வார் மஹிந்தர்!

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பெரும்பாலும் கலந்துகொள்வார் என கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு புதுடடெல்லியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

அயல் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அயல்நாட்டுடன் எப்போதுமே சுமுக உறவை விரும்பும் இலங்கை, அந்த உறவையும் நட்பையும் பலப்படுத்துவதையே விரும்புகிறது. இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுவதன் மூலம் இந்தியாவின் புதிய ஆட்சிப் பீடத்துடன் ஒரு நெருக்கமான உறவைத் தொடர்வதற்கும், இருதரப்பு ஊடாட்டத்தைப் பலப்படுத்துவதற்கு முடியும் என கொழும்பு கருதுகின்றது' என இவ்விடயங்களுடன் சம்பந்தப்பட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் 26ஆம் திகதி, திங்கட்கிழமை மாலையில் புதுடெல்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகின்றது. தற்சமயம் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி, அங்கிருந்து திரும்பிய பின்னர், புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் பங்குபற்றுவதற்காகப் புதுடெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 comments :

arya ,  May 21, 2014 at 9:01 PM  

மிக நல்லது, இதை தான் நான் எதிர்பார்த்தேன், இவர்கள் இருவரும் இணைந்து செயல் படுவதே இரு நாடுகளுக்கும் நன்மை பார்க்கும், விரைல்வில் மோடி இலங்கை வருவார் என எதிர்பார்ப்போம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com