சர்வதேச விசாரணை இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு அல்ல! மீண்டுமொரு தடைவ இலங்கை வாருங்கள்!பான்கீயிடம் மஹிந்த!
சர்வதேச விசாரணையொன்று இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு அல்ல. மீண்டும் இலங்கைக்கு வருகை தந்து உண்மை நிலையை நேரில் கண்டறியுமாறு, ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு, ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனை, நேற்று சந்தித்துள்ளார்.
யுத்தத்திற்கு பின்னர் இலங்கை ஈட்டியுள்ள துரித அபிவிருத்தியை, ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார். மீண்டுமொரு தடவை இலங்கைக்கு வருகை தந்தால், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை நேரில் கண்டுகொள்ள முடியுமென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.
கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதன் முன்னேற்றங்களையும் ஜனாதிபதி எடுத்துக்கூறினார். யுத்தம் இடம்பெற்றபோது, நிகழ்ந்ததாக கூறப்படும் வன்முறைகள் தொடர்பாக, உள்நாட்டில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் சர்வதேச விசாரணையொன்றை தமது மக்கள் எதிர்பார்க்கவில்லையென்றும், ஜனாதிபதி வலியுறுத்தி கூறினார்.
ஐக்கிய நாடுகள் ஸ்தானத்தின் திட்டங்களுடன் இலங்கை தொடர்ந்தும் செயற்படப்போவதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை அடைந்துள்ள அதிஉயர் முன்னேற்றம் தொடர்பாக பாராட்டு தெரிவித்த ஐ.நா. செயலாளர் நாயகம், இளைஞர்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக நடாத்த முடிந்தமை தொடர்பிலும், இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதி ஊழியர் பிரிவு தலைவர் காமினி செனரத், வெளியுறவு செயலாளர் ஷெனுகா செனவிரட்ன, சீனாவில் உள்ள இலங்கை தூதுவர் ரஞ்சித் உயன்கொட ஆகியோரும், இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment