Thursday, May 22, 2014

சீனாவில் ஜனாதிபதி மகிந்தவின் முக்கிய உரை!

ஒரு தேசத்தின் அல்லது பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமாதானமும், பாதுகாப்பும் ஸ்திரதன்மையும் மிக மக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமாதானம் மற்றும் ஸ்திரதன்மையுடன் கூடிய புதிய ஆசியாவை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி பிராந்திய தலைவர்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆசியாவின் பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான 4வது மாநாட்டில் உரையாற்றும்போதே, ஜனதரிபதி மஹிந்த ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

சீனாவின் ஷங்ஹாய் நகரில் அதன் தலைவரும், சீன ஜனாதிபதியுமான ஷீ ஜின்பிங் தலைமையில் மாநாடு ஆரம்பமாகியது. சகல தரப்பினர் மத்தியிலும், புரிந்துணர்வை கட்டியெழுப்பும் தொனிப்பொருளில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சீன ஜனாதிபதி முன்மொழிந்த புதிய ஆசியாவின் பாதுகாப்பு தொடர்பான கோட்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என, தெரிவித்தார். இதனடிப்படையில் ஆசியாவின் நெருக்கடிகளை தீர்த்து வைப்பதில், இந்த தீபகற்பத்தில் உள்ள நாடுகள் முன்நின்று செயற்பட வேண்டுமென, தெரிவித்தார்.

ஆசியாவின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பல்தரப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது, இந்த மாநாட்டின் அங்கத்துவ நாடுகளின் முக்கியமான பணியாகும். முன்னேறி வரும் உலக பலசாளியாக கருதப்படும் ஆசியாவின் மீது சர்வதேச கவனம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிராந்திய ரீதியாகவும், வெளிவாரியாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒரு பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் ஸ்திர தன்மையை கட்டியெழுப்பும்போது, எமது நாடுகளின் இறைமை, ஒருமைப்பாடு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், கவலைக்குர்pய விடயமாக இருப்பது, இந்த அடிப்படை உரிமை, உலகில் மீறப்படுவதாகுமென்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தமது நலனை அடிப்படையாகக் கொண்டு சில வெளிச்சக்திகள் சர்வதேசம் என்ற போர்வையில், நாடுகளின் அந்தரங்க விடயங்களில் தலையிட முயற்சிக்கின்றன.

இது முழுப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாக அமையும். சர்வதேச ரீதியில் வர்த்தக மற்றும் அடிப்படை ரீதியிலான நலன்களினால் அல்லது உள்ளுர் ரீதியாக அரசியல் அதிகாரத்தை பலப்படுத்தும் நோக்கில், முன்னெடுக்கப்படும் இந்த வெளிச்சக்திகளின் எதிர்பார்ப்பு, ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாகும். உள்நாட்டு ஐக்கியத்தை சீர்குலைப்பதே, அவர்களது அடிப்படை நோக்கமாகும்.

நாடுகளின் இறைமையில் கைவைத்து, நாடுகளின் எல்லையை தாண்டி, பல்வேறுவிதமான திட்டமிட்ட குற்றச்செயல்கள், பயங்கரவாதம் அதற்கு நிதிதிரட்டுவது, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களுடாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களும் இதற்கு சிறந்த உதாரணமாகும். வெளிச்சக்திகளால் அவரவர் எல்லையில், இறைமைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை பாதுகாப்பதற்குமு:, பலமான ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும், இந்த மாநாட்டின் அங்கத்தவர்களால் முடியும்.

ஆசியாவின் பல நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, பயங்கரவாதமாகும். அதனை எமது நாட்டிலிருந்து பூண்டோடு ஒழித்துக்கட்டும் அனுபவத்தை, அங்கத்துவ நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு, தான் விரும்புவதாகவும், ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார சுபீட்சத்தின் பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு, இடமளிக்க சகல மக்களுக்கும் வளங்களை சமமாக பகிர்ந்து, சமாதான யுகத்தை தனது அரசாங்கம் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் பெற்ற அனுபவங்களை இந்த மாநாடு போன்ற மேடைகளுடாக பகிர்ந்து கொள்ள முடியும். இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்துக்கட்டியமை, தமது தேவைகளுக்காக முன்நிற்கும் குழுக்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு, வழிவகுத்திருப்பது, கவலைக்குரிய விடயமாகும். இந்த செயற்பாட்டின் மூலம், தொடர்ந்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவது, துரதிஸ்டவசமே.

எது எவ்வாறிருப்பினும் சமாதானத்திற்கும், ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்கும் எதிரான சர்வதேச சவால்களை வெற்றிகொள்வதே, இன்றைய தினம் எமது தேவையாக அமைந்துள்ளது. அதற்கு நல்லெண்ணமும், சகோதரத்துவமும், இன்றியமையாது தேவைப்படுகிறது. தமது பூமியில் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அங்கத்துவ நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு, முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்வதற்கும், ஆசியாவின் பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பாக மாநாடு மற்றும் அதன் அங்கத்தவர்களுக்கு முறையான வேலையாக அமையுமென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் அங்கத்தவர்கள் அடங்கிய பிராந்திய எரிசக்தி வளங்களுடன் கூடியதாக காணப்படுகிறது. இதற்கு ஏற்படக்கூடிய வெளிச்சக்திகளின் சவால்களிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டியதன் முக்கியத்துவத்தையும், ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் கண்காணிப்பு நாடாக கலந்து கொள்ளக்கிடைத்தமை இலங்கைக்கு ஒரு கௌரவமென தெரிவித்த ஜனாதிபதி, இந்த முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் சகல பேச்சுவார்த்தைகளிலும் நேரடியாக பங்குகொள்வதாகவும், அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com