பிரபல போதைப்பொருள் தாதா கைது !! (படங்கள்)
மாலைதீவைச் சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகரான இப்ராஹிம் சபாஸ் அபுதுல் ரஷாக் என்றழைக்கப்படும் 'சபா' இலங்கை பொலி ஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு செய்தி தெரிவிக்கின்றது. மாலைதீவு நீதிமன்ற அனுமதியுடன் கடந்த பெப்ரவரி மாதம் சிகிச்சைக்காக இலங்கைக்கு வருகைதந்த அவர், நாடு திரும்பாததையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இலங்கை பொலிஸாரும் மாலைதீவு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பி லுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர், சிகிச்சை பெற்றுவந்ததாக தெரிவிக்கப் படுகின்றது.
0 comments :
Post a Comment