மோடி பதவியேற்பு விழாவில் மகிந்தர் கலந்துகொண்டால் ஜெயலலிதா இல்லை…!
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்யவுள்ள நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதாக புதுடில்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் அதனை ஊர்ஜிதம் செய்துள்ளது.
இதுதொடர்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அவருடன் அப்பிராந்திய அரசியல்வாதிகளும் நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் அவ்வூடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிகழ்வில் கலந்து கொள்வது தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறவுள்ளதாக அவ்வூடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
(கேஎப்)
0 comments :
Post a Comment