நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உரிய முறையில் நிர்மாணிக்காத சீன அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை !
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உரிய முறையில் நிர்மாணிக்காத காரணத்திற்காக சீன அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் சகல நிர்மாணப் பணிகளையும் மேற்பார்வை செய்த இரண்டு உயர் அதிகாரிகளே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். நிர்மாணப் பணிகளை பொறுப்புடன் மேற்கொள்ளாத காரணத்தினால் அனல் மின் நிலையத்தின் பணிகள் தோல்வியடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாதக நிலைமை ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், இதற்கு காரணமான உயர் சீன அதிகாரிகள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்;டனை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த சீன அதிகாரிகளுக்கு எப்போது எவ்வளவு காலம் தண்டனை விதிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் வழங்கப்படவில்லை.
இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையம் பாதிக்கப்படுவதற்கு பொறுப்பாக செயற்பட்ட இலங்கை மின்சார சபையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எவ்வித தண்டனையும் விதிக்கப்படவில்லை என இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment