பொசனன்று பிறந்த குழந்தையின் கழுத்தை உடைத்து காற்றில் வீசிய தா(பே)ய் கைது!
சென்ற 14 ஆம் திகதி வெசாக் விடுமுறை தினத்தன்று பிறந்த குழந்தைக்கு தகப்பன் இல்லையென்று கூறி, பச்சிளம் குழந்தையின் கழுத்தை உடைத்து காட்டிற்குள் வீசிய தா(பே)ய் ஒருத்தியை எகலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மின்னான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 18 வயது யுவதியொருத்தியே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்.
தனது தன்னிச்சையான தனத்தின் காரணமாவே குறித்த யுவதி கருத்தரித்துள்ளதாகவும், அதுபற்றி வீட்டார் மற்றும் உற்றார் சுற்றத்தோர் விசாரித்தபோது அவர்களைத் திட்டித் தீர்த்தாகவும் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.
மே 14 ஆம் திகதி அதிகாலை குறித்த யுவதி வீட்டின் பின்பக்கமாகவுள்ள காட்டிற்குச் சென்று பிள்ளையைப் பிரசவித்துள்ளதுடன், தொப்புள் கொடியையும் அறுத்து பிள்ளையின் கழுத்தை உடைத்து வீசிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment