வெள்ளம்பிட்டியிலுள்ள பாரிய வீடொன்றில் சட்டவிரோதமாக மாடறுத்த மூவர் கைது!
வெல்லம்பிட்டி கொட்டிகாவத்த பாரிய வீடொன்றில் சட்ட விரோதமான முறையில் மாடறுக்கப்பட்டு வருவது தொடர்பில் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். தந்தை ஒருவரும், மகனும், அவரது மைத்துனனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்தேக நபர்கள் வீட்டின் அறையொன்றில் மாடொன்றை அறுத்து இறைச்சி செய்துகொண்டிருந்ததுடன், அறுப்பதற்காக கொண்டுவரப்பட்டிருந்த பசுமாடுகள் மூன்றையும், காளை மாட்டையும், மூன்று கன்றுக் குட்டிகளையும் பொலிஸார் தம் வசப்படுத்தியுள்ளனர்.
பல வருடங்களாக இரகசியமான முறையில் இந்த சொகுசு வீட்டின் ஓர் அறையில் இவ்வாறு மாடுகள் இவர்கள் மூவரினாலும் அறுக்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment