துமின்தவால் கொலன்னாவை ஹிருணிக்காவுக்குத் தடை செய்யப்படுகிறது…!
பாராளுமன்ற உறுப்பினர் துமின்த சில்வாவினால் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு கொலன்னாவ தொகுதி உத்தியோகப் பற்றற்ற முறையில் தடைசெய்யப்பட்ட வலயமாக மாற்றுவதற்காக ஆவன செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
நேற்று முன்தினம் வெல்லம்பிட்டியில் விமலாராம விகாரையின் மூன்று மாடிக் கட்டடத் திறப்பு விழாவுக்கு ஹிருணிக்கா பிரேமச்சந்திர அழைக்கப்பட வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழுவில் ஒருவர் கருத்து முன்வைத்தபோது, அதில் உடன் குறிக்கிட்டு துமின்த சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ஹிருணிக்கா நிகழ்வில் கலந்துகொண்டால் தான் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொல்லானாவை தொகுதியின் அமைப்பாளர் தான் எனவும், ஹிருணிக்கா கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்விலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் துமின்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அமைப்பாளர்கள் இறுதியில் துமின்தவின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹிருணிக்காவின் பெயரை அழைப்பாளர் பட்டியிலிலிருந்து நீக்கிவிட்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment