Sunday, May 18, 2014

காணாமற் போனோர் எனக் கூறப்படுகின்ற புலிகள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை நடாத்துகின்றார்கள்…!

இலங்கையில் போர் நடைபெற்ற காலப் பகுதியில் காணாமற் போனோர் எனக் குறிப்பிடப்படுகின்றவர்கள் காணாமற் போகவில்லை என தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.

புலி முக்கிய உறுப்பினரும் கணனி பொறியியலாளருமான கே. தியாகராசா (33) என்பவர் இந்தியாவில் தனுஷ்கோடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் குறித்த புலிப் பினாமியை இலங்கை அரசு கைதுசெய்து, பல்வேறு கொடுமைகளுக்குட்படுத்தியது என இலங்கை மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பல அரசாங்கத்தின் மீது பழி சுமத்தியிருந்தது.

ஆயினும் குறித்த நபர், இலங்கையிலிருந்து தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடனும் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்கு வாழ்க்கை நடாத்தியுள்ளார்.

கே. தியாகாரசா எனும் குறித்த புலி உறுப்பினர் காணாமற்போனோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதோடு, பட்டியலில் உள்ள பலர் வாழ்ந்து வருவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

2 comments :

Unknown May 18, 2014 at 11:36 AM  

very useful article, and I am very happy to visit this blog hopefully we can visit are associated
thank you
cara diet alami

Anonymous ,  May 18, 2014 at 8:57 PM  

இது உண்மையான உண்மை. பொது மக்களை வெளியேற விடாமல் தடுத்து, கட்டாயப்படுத்தி தங்களின் பாதுகாப்பு அரணாக பாவித்தது மட்டுமல்ல கட்டுபாட்டை மீறியவர்களை சுட்டு கொன்று விட்டு, தாங்களும் தங்களின் குடும்பங்களும் மட்டும் தப்பி வெளிநாடுகளுக்கு போய் வாழும் புலிகள், புலி குடும்பங்கள் எல்லோரையும் அறியும் நாள் தொலைவில் இல்லை. அவர்களே முதலாவது தமிழீழ துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் என்றும் மறக்கப் போவதில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com