Sunday, May 18, 2014

ஐந்து - ஆறு பிள்ளைகளின் தந்தையாக இருப்போரும் இன்று சாதுக்களாக காவியுடை தரித்திருக்கிறார்கள்! - பிரதமர்

மதம் சார் சிந்தனைகளும், செயற்பாடுகளும் இன்று மிகக் குறைந்து வருவதாகவும் இலங்கையில் மத்ததிற்கு தீங்கு விளைவிக்கப்படுவதாகவும், அதற்குக் காரணம் மூத்தோரின் அசமந்த போக்கு எனவும் பிரதமர் தி.மு. ஜயரத்ன குறிப்பிடுகிறார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற வெசாக் விழா நிகழ்வின்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இன்று மெல்ல மெல்ல மதம் அழிவின்பால் செல்கிறது. மதம் சார் சிந்தனைகளும், மதம்சார் செயற்பாடுகளும் பெரும்பாலும் குறைந்துள்ளன. அவ்வாறு ஆவதற்கு காரணம் மூத்தோரின் செயற்பாடுகளே. சிறுவர்களும் அதனைப் பின்பற்றுகின்றார்கள். நாங்கள் வாழ்வில் ஒருபோதும் பெற்றோரைக் கொலை செய்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை. இப்போது கொலை செய்கிறார்கள்.

தாயின் சிறப்புப் பற்றியும் தந்தையின் சிறப்புப் பற்றியும் புத்த பெருமான் எப்படியெல்லாம் சிறப்பாக போதனையாற்றினார் தெரியுமா? நாங்கள் சிறுவயதில் தாய் - தந்தையரை வணங்கினோம். இன்று என்னதான் நடக்கிறது? இவற்றைப் பார்க்கும்போது நாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது? அதனால் நாங்கள் அதற்காக செயற்பட வேண்டியுள்ளது.

இன்று நாட்டில் காவியுடை அணிந்து கொண்டு ஒரு சாரார் இருக்கின்றார்கள். தேடிப்பார்த்தால் அவர்களுக்கு 5-6 பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் பணவசூலிப்பு நடாத்துகின்றார்கள். இவ்வாறு இவர்களின் செயற்பாடு தொடர்வதன் மூலம் மகா சங்கத்தினருக்கும் அகௌரவமே ஏற்படுகின்றது. இன்று இளம் சாதுக்கள் விகாரைக்கு வந்தவுடன் அவர்களுக்கு பெரிய இடம் கொடுக்கிறார்கள். முன்னர் அப்படியிருக்கவில்லை. இவ்வாறு வந்து சேருகின்றவர்கள் பல்கலைக் கழகக் கல்வி முடிந்ததும் காவியுடையைக் களைகிறார்கள். எங்கள் நாட்டில் 147 “பன்சாலை”கள் மூடப்பட்டுள்ளன.” எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com