மாவனல்லை ஹாட்வெயாரில் தீ விபத்து!
இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் மாவனல்லை பூட் சிட்டிக்கு முன்னுள்ள ஹாட்வெயார் கடை ஒன்றிற்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கடையில் உள்ள அனைத்துப் பொருட்களும் தீயில் கருகிச் சேதமாகி உள்ளன.
பொதுமக்கள் மற்றும் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் இந்த தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக தீயணைப்புப் படையினர் கண்டியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது. இது தொடர்பாக மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்றாலும், இதுவும் இனத்துரோகிகளின் செயலாக இருக்குமோ என பொதுமக்கள் பேசிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment