ஜனாதிபதி மகிந்தர் சீனா பயணம்!
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (19) திங்கட்கிழமை பிற்பகல் சீனா பயணத்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஆசியாவில் தகவல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சீனா பயணித்த்தாகவும் செயலகம் தெரிவித்துள்ளது. 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சங்காயில் நடைபெறும் மாநாட்டில் 24 அங்கத்துவ நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன.
அத்துடன் இந்த மாநாட்டில் அமெரிக்கா உட்பட்ட 9 நாடுகள் பார்வையாளர்களாக பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாட்டில் ஆசிய நாட்டு மக்களின் சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற விடயங்கள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளிடையே சமாதானதம், பாதுகாப்பினைப் பலப்படுத்துதல் போன்றன இம்மாநாட்டின் குறிக்கோள்களாக இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உரையாற்றவுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment