பிரபல அமைச்சர் ஐதேகாவுக்கு… - திஸ்ஸ அத்தநாயக்க
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், ஆளும் கட்சி முக்கிய அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார். அந்த பிரபல அமைச்சருடன் சேர்ந்து, ஆளும் கட்சியிலிருந்து இன்னும் சில அமைச்சர்கள் விலகுவதற்கு ஆயத்த நிலையில் இருப்பதாக அவர் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது குறிப்பிட்டார்.
விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நடாத்தும் பிரச்சாரங்கள் உண்மையானவையா எனச் சந்தேகம் எழுவதாக அங்கு குறிப்பிட்டுள்ள அவர், அவை வெறும் பூச்சாண்டி மட்டுமே என்றும் நாடகமே என்றும் அவற்றின் பிரதிபலன் வெற்றிகரமாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரும் கலகம்… இவ்வாறு குறிப்பிடுபவர்கள் யார்? ஒருவர் விமல் வீரவன்ச மற்றவர் சம்பிக்க ரணவக்க. இவர்கள் இருவரும் என்ன கதைதான் சொல்கிறார்கள்? அரசாங்கத்தின் உண்மைத் தன்மையை அடுத்தவர்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் வெளியிறங்கிச் சொல்கிறார்கள்… அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தோம். ஏன் நாங்கள் இதனை முன்வைத்தோம்? மூன்றில் இரண்டு பலம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே நாங்கள் அதனை முன்வைத்தோம்.
உண்மையில் தேசாபிமானிகள் என்கின்ற, அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து இருக்கின்றவர்களின் மனச்சாட்சி பற்றிக் கேளுங்கள்… இனி நாங்கள் விமலாருக்கும், சம்பிக்கவுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.. இனியும் உங்கள் நாடகம் மேடையேறாது…. வெற்றிபெறாது என்பதே உண்மை.
(கேஎப்)
0 comments :
Post a Comment