பட்டாசுச் சத்தத்திற்குப் பயந்து இரவெல்லாம் மரத்தில் இருந்தார் விஜித்த தேரர்!
மகியங்கனைப் பிரதேச சபை உறுப்பினரும் மகவெலி விகாராதிபதியும், ஜாதிக்க பல சேனாவின் பொதுச் செயலாளருமான வட்டரெக்க விஜித்த தேரர் இரவு முழுவதும் மரத்தில் இருந்தார் என்று தெரியவருகின்றது. நேற்று முன்தினம் இரவு அவர் விகாரைக்கு வருகை தந்த நேரம், கிராம மக்கள் காட்டு யானைகளை விரட்டுவதற்காக பட்டாசு கொளுத்தியுள்ளனர்.
அதனால் பயந்துபோன விஜித்த தேரர், காட்டிலுள்ள மரம் ஒன்றின் மீது ஏறி இரவு முழுவதும் அதில் சரணாகதியாகியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment