பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ், எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தருவதாக, உறுதியளித்துள்ளார்!
திர்வரும் ஜனவரி மாதம் தான் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக, பாப்பரசர் தெரிவித்துள்ளார். ஜெருசலத் திலிருந்து ரோம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்துபோது, விமானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிமேற்றாணியார் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும், பாப்பரசருக்கு இலங்கைக்;கு வருகை தருமாறு, அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் ஜனாதிபதி, கடந்த ஆகஸ்ட் மாதம், இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தமை, குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கும், பிலிப்பைன்ஸூக்கும் விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் 1970ம் ஆண்டிலும், 1995ம் ஆண்டிலும் பாப்பரசர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
0 comments :
Post a Comment