Saturday, May 10, 2014

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட புலிகளை அவதானத்துடன் கையாள வேண்டும் - முன்னாள் இந்திய புலனாய்வு தலைவர்!

யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் தமிழகத்துக்கு அகதிகளாக வருகிறார்கள்?

கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் அவதானத்துடன் கையாள வேண்டும் எனவும் முன்னாள் போராளிகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் ஏன் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் தமிழகத்துக்கு அகதிகளாக வருகிறார்கள் என்பது தொடர்பில் கேள்வி எழுவது மாத்திரமல்லாமல் அவதானமாக இருக்குமாறும் முன்னாள் இந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் அரிசல்முனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளில் மூவர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து 10 பேர் இவ்வாறு அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்தனர். அவர்களில் தாய்மார் இருவரும், அவர்களின் பிள்ளைகளும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளன. ஏனைய மூன்று ஆண்கள் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com