இன்னும் மூன்று மாதங்களில் இலங்கையில் சேலைன் தொழிற்சாலை…!
இன்னும் மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் ”சேலைன்” உற்பத்தி தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்காக தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு 47 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், அவற்றில் 7 தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த 7 நிறுவனங்களிலும் இருந்து ஒரு நிறுவனத்தைத் தெரிவுசெய்ய உள்ளதாகவும் அமைச்சர் மைத்ரிபால சிரிசேன குறிப்பிடுகிறார்.
இதற்கு முன்னர் அதாவது, முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் “சேலைன்” தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தபோதும், இதுவரை அவ்வாறான ஒரு தொழிற்சாலையை அமைக்க வெளிநாட்டுத் தொழிற்சாலைகள் இடமளிக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்குத் தேவையான “சேலைன்” இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக ஒரு வருடத்திற்கு ரூபா ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொகைப் பணம் தேவைப்படுகின்றது என்றும், இச்சூழ்நிலையில் புதிதாக தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டதென்றும், அதற்கேற்ப 47 நிறுவனங்கள் அதற்காக முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் சிரிசேன குறிப்பிட்டார்.
எதிர்வரும் மூன்று நான்கு மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு இயலுமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment