Wednesday, May 14, 2014

ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேக்காவுக்கு நான்தான் “கேம்“ கொடுத்தேன்! - ராஜித்த

சரத் பொன்சேக்கா அன்றும் இன்றும் தனது நெருக்கமான நண்பன் எனவும், 2010 ஜனாதிபதித் தேர்தலின் போது, தனுன திலகரத்னவின் மிக அண்மித்த நண்பரான உபுல் இலங்ககேவை அனுப்பி பொன்சேக்காவுக்கு எதிராக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தான் என கடல் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தனது தனிப்பட்ட இரகசியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவிக்கின்றது.

அச்செய்தியில் -

கொழும்பில் கடற்றொழில் அமைச்சின் புதிய இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் தன்னிடம் தங்கியிருந்த இரகசியத்தை இவ்வாறு போட்டு உடைத்துள்ளார்.

கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி டீ.எம்.ஆர்.பீ. திசாநாயக்க, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் வைத்தியர் சுஜாத்தா சேனாரத்ன, அரச செய்திப் பணிப்பாளர் வசந்தப்பிரிய ராமநாயக்க மற்றும் இணையத்தள ஆக்குநர் உபுல் இலங்ககே ஆகியோர் கலந்துகொண்ட அந்நிகழ்வில் அமைச்சர் குறிப்பிடுகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் உபுல் இலங்ககேவை அனுப்பி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தனக்கு அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சேனாரத்ன குறிப்பிடும்போது -

உபுல் இலங்ககே என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது போல அன்று பொன்சேக்காவுடனும் நெருங்கி தொடர்பு கொண்டிருந்தார். அவர் இலங்கைக்கு வரும்போது சரத் பொன்சேக்கா அவர் மகிழ்ச்சியாய் இருக்க பாசறையை மூடுவார். பொன்சேக்காவின் மைத்துனனான தனுன திலகரத்னவின் பணக் கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்பான இணையத்தளத்தின் கடவுச்சொல் இலங்ககேவிடமே இருந்தது.

2010 ஜனாதிபதித் தேர்தலில் அன்று பொன்சேக்கா, மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக களமிறங்கியபோது தனுனவின் சகல தகவல்களையும் பெற்றுக்கொண்டு உபுல் இலங்ககே ஜனாதிபதிக்கு ஒத்தாசை வழங்க இலங்கை வந்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com