Wednesday, May 14, 2014

ரிஷாத் பதியுதீனின் அத்துமீறிய செயல்! 18 ஆயிரம் ஏக்கர் காடுகளை அபகரித்துள்ளார் - சுற்றுச் சூழல் சங்கங்கள்

வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சொந்தமான 18 ஆயிரம் ஏக்கர் காடுகளை சட்டத்தை மீறி வெட்டி அபகரித்துள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது, சுற்றுச் சூழல் சங்கங்கள் நான்கினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நேற்று குற்றம் சாட்டியுள்ளன. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள பாதுகாக்கப்பட்ட 14 காடுகளில் மரங்களை வெட்டினாரெனவும் சுற்றுச் சூழல் நீதிக்கான மையம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, இலங்கை சுற்றுச் சூழல் காங்கிரஸ், இயற்கைக்கான பௌத்த அமைப்பு ஆகியன ரிஷாத் மீது குற்றம்சாட்டியுள்ளன.

இந்நடவடிக்கையானது சுற்றுச் சூழல் சட்டத்தை மீறி காடுகள் வெட்டப்பட்டுள்ளதையே எடுத்தியம்புவதாக, சுற்றுச் சூழல் நிதிக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே கூறினார். மீள்குடியேற்றத்துக்காக மடுப்பகுதியில் கூடுதல் நிலங்களை விடுவிக்க வேண்டுமென அதிகாரிகளை அமைச்சர் ரிஷாத் நிர்ப்பந்தித்து வருகிறாரெனவும் அவர் குற்றம் சாட்டினார்.

உள்நாட்டில் இடம்பெயந்தோரை மீளக் குடியமர்த்தும் அலுவல்கள் 2012ஆம் ஆண்டில் முடிந்த பின்னரும், மீளக் குடியமர்த்தலுக்காகவென காடுகள் ஏன் அழிக்கப்படுகின்றன எனவும் விதானகே கேள்வியெழுப்பினார்.

பெரியமடு, கல்லாறு, கருங்காலிபுரம் ஆகிய இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டதாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை பணிப்பாளர் சஞ்ஜீவ சணிகர சுட்டிக்காட்டினார். மேலும் வில்பத்து விலங்குகள் சரணாலயத்தின் வழியே 100 கிலோமீற்றர் வீதி அமைக்கப்பட்டதாகவும் இதுவே மாங்குளத்திலும் நடந்துள்ளதெனவும் அவர் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com