அமெரிக்க தூதுவரை பொது அபேட்சகராக நிறுத்தலாமே! - மகிந்த யாப்பா!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிஷெல் சிசொன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக நிறுத்துவதற்குப் பொருத்தமானவர் எனவும், அதற்கான சகல தகுதிகளும் அவருக்கு இருக்கின்றது எனவும் விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிடுகிறார்.
எதிர்க்கட்சி பொது அபேட்சகர்களாக தற்போது பிரேரித்திருப்பவர்களைவிடவும் அவர் பொருத்தமானவர் என்கிறார் அவர்.
தற்போது பிரேரிக்கப்பட்டுள்ள பொது அபேட்சகர்களை விடவும் அமெரிக்கத் தூதுவர் இந்நாட்டுக்கு பல சேவைகளை ஆற்றியிருக்கின்றார் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.
கொழும்பு நகரின் அபவிருத்திக்காகவும் மிஷெல் பாரிய பங்களிப்பு செய்திருக்கிறார் எனவும், வடக்கின் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் பற்றி துயரங்கள் பற்றி கேட்டறிந்தார் எனவும் மகிந்த யாப்பா அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
1 comments :
Why not? She having a very good contacts with LTTE treind TNA members, so she can be a candidate in Sri Lanka.
Post a Comment