ஹட்டனில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை ; காதலியின் தந்தை கைது !! ( படங்கள் )
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் இளைஞன் ஒருவர் இன்று கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவர் செல்லையா செல்வரட்ணம் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கைகலப்பில் குறித்த இளைஞன் காதலித்த பெண்ணின் தந்தையே ( மருதமுத்து பாலகிருஷ்ணன்- வயது 42) இந்தக் கொலை செய்திருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment