Thursday, May 15, 2014

ராஜரட்ணம் ரூபா 39 கோடியை ரவி கருணாநாயக்கவின் வேண்டுகோளின் பேரிலேயே அனுப்பினார்…!

அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டு ரூபா 39 கோடியை அமெரிக்காவின் பெருஞ் செல்வந்தனான ராஜ் ராஜரத்னம் என்பவர் இலங்கைக்கு அனுப்பிவைத்திருப்பது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளின் வேண்டுகோள் மற்றும் தேவைப்பாட்டின் காரணமாகவே என கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சட்ட மாஅதிபருக்குப் பதிலாக காட்சி கொடுத்த அர உயர் வழக்கறிஞர் திலீப பீரிஸின் அநுசரணையின் கீழ் முன்னாள் பதில் செலாவணி கட்டுப்பாட்டு அதிகாரி குமார பெரேரா வழங்கிய சாட்சியின் அடிப்படையிலேயே இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவ்வழக்கு கொழும்பு பிரதான உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹிணி வல்கமவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோது, தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பிரதிவாதியான ரவி கருணாநாயக்க, லிங்கன் பியசேன, நெக்சியா நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் முகவர் ஒருவரும் வந்திருந்தனர்.

வாதியின் தரப்பில் சாட்சியமளித்த குமார பெரேரா, வெளிநாட்டிலிருந்து கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்கள் வந்துசேர்ந்துள்ளன என சென்ற வழக்கு விசாரணையின்போது குறிப்பிட்டிருந்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com