Thursday, May 15, 2014

முதல் முறையாக இந்தியா எல்.ரி.ரி.ஈ மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது!

முதல் முறையாக எல்ரிரிஈ இயக்கத்திற்கு 5 ஆண்டுகால தடையை இந்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளதாக பிரிஐ செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது. எல்.ரி.ரி.ஈ இயக்கம் இதற்கு முன்னர் ஈராண்டுகளுக்கு மாத்திரமே இந்தியாவில் தடை செய்யப்பட்டு வந்தது. முதல் முறையாக இம்முறை 5 ஆண்டுகளுக்கு இத்தடையை நீடித்துள்ளது. இதற்கான அறிவிப்பு "மே" அல்லது "ஜூன்" மாதங்களில் வெளியிடப்பட்டு வந்தது. 2009 ஆம் ஆண்டு இறுதி போரில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் அழிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது. இந்தியாவில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் ஒரே முறையில் 5 ஆண்டுகளுக்கு விடுதலை புலிகள் இயக்கம் மீது தடையை விதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா? வராதா என்ற நிலையில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையிலேயே இத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

2 comments :

Arya ,  May 16, 2014 at 2:24 AM  

நல்ல சந்தோசமான செய்தி, நெத்தியடி என்றால் இதுதான், இந்திய பாதுகாப்புக்கு இந்த தடை நல்ல பயன் உள்ளதாக இருக்கும். புலிகள் எப்போதுமே இந்தியாவி ன் எதிரிகள் என்பது அவர்களுக்கு புரிந்துள்ளது , புலன் பெயர் தேசங்களில் வெளியாகும் புலி ஊடகங்களை பார்த்தாலே புலிகள் இந்தியாவை மேல் எவ்வளவு பழி வாங்கும் வெறியுடன் உள்ளார்கள் என்பது புரியும்.

Arya ,  May 16, 2014 at 2:25 AM  

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com