“வெசாக்” பண்டிகையை முன்னிட்டு 1000 கைதிகளுக்கு விடுதலை!
“வெசாக்” பண்டிகையை முன்னிட்டு 1000 கைதிகளை இன்று (19) விடுதலை செய்ய சிறைச்சாலைத் திணைக்களம் ஆவன செய்துள்ளது.
அபராதத் தொகையை செலுத்தவியலாத, சிறிய குற்றங்களுக்காக சிறைவைக்கப்பட்டுள்ளோர், 70 வயதிற்கு மேற்பட்ட கைதிகள் என்போரில் ஆயிரம் பேரை விடுதலை செய்யவே சிறைச்சாலைத் திணைக்களம் ஆவன செய்துள்ளது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் தலைமையக அதிகாரியுமான ரீ.என். உபுல்தெனிய இதுவிடயமாக கருத்துரைக்கும்போது, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலேயே கைதிகள் விடுதலை செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment