Monday, May 19, 2014

புது கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் அநுர - சோபித்த

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தற்காலத்தின் முக்கிய தேவையாக இருப்பதாகவும், அத்தோடு நாட்டிற்குப் பொருத்தமான பொருளாதார முறை, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வு, பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் மேற்கொள்ள வேண்டிய மாற்று வழிமுறைகள் தேவைப்பாடாக உள்ளன என்று ஜே.வி.பி. தெளிவுறுத்துகின்றது.

மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கு இடையே நேற்று (18) காலை பெலவத்தை ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு செய்திருக்கின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்வதற்கும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை வலுவுடையதாக மாற்றுவதற்கும் தேவையான பிரேரணைகள் கலந்தாலோசிக்கப்பட்டன எனவும், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்த பிரேரணை நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் தெளிவுறுத்தப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடைமுறை அரசியல் மாற்றத்திற்கேற்ப விடயங்கள் அடுத்துவரும் சந்திப்புக்களில் இருதரப்பும் பேசுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில் ஜேவிபி யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, மாதுலுவாவே சோபித்த தேரர், சட்டத்தரணிகளான கிரிஷாந்த வெலிஅமுன, நிமல் புஞ்சிஹேவா, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பத்தி விக்கிரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com