Monday, April 7, 2014

தமிழர்களின் நிதியை பதுக்கி விளையாடும் சம்மந்தனும் சுமந்துவும்! ஹா... ஹா... சித்திரன்

வடக்கு பகுதியில் புலிகள் அமைப்பை மீள உருவாக்கி அதன் மூலம் இலாபம் ஈட்டுவதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் சில முயற்சி செய்தன. இதனையடுத்து புலம்பெயர் அமைப்புக்கள் பதினாறும் புலிப்பினாமிகள் 424 பேரும் இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்டவர்களில் பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பினாமிகள் ஆவார். இவர்களே கூட்டமைப்பு எம்.பிகளையும் மாகாணசபை உறுப்பினர்களையும் வெளிநாடுகளுக்கு அழைத்து அங்குள்ள மக்களை சந்திக்க வைத்தனர்.

இவ்வாறு கூட்டமைப்பு எம்பிமாரை சந்திக்க வருபவர்களிடம் தடைசெய்யப்பட்ட சிலர் பணம் வாங்கி அதில் ஒரு தொகையை தாமும் எடுத்துக் கொண்டு மிகுதிப் பணத்தை கூட்டமைப்புக்கு வழங்கினர்.

கூட்டமைப்பின் கொண்டம் சிறிதரன், தேசியப்பட்டியல் அப்புக்காத்து சுமந்திரன், தடுமாற்றக்கார சம்மந்தர் ஆகியோரே இவ்வாறு சென்று பெருமளவான நிதியினை பெற்று வந்தனர். கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத அமைப்பு என்பதால் வாற காசு எவ்வளவு? செலவு எவ்வளவு என்ற எந்தக் கணக்கும் யாருக்கும் காட்ட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்படவில்லை. இதனால் இவர்களுக்கு ஒரே பணமழைதான்.

வெளிநாட்டு புலிப்பினாமிகள் மூலம் அவர்களையும் வளர்த்து தம்மையும் வளர்த்து வந்த கூட்டமைப்புக்கு தற்போது சிக்கல் நிலை தோன்றியுள்ளது. பினாமிகளையும் அவர்களது அமைப்புக்களையும் தடைசெய்துள்ளமையால் இனி வெளிநாடு கண்டபடி செல்ல முடியாது. அங்கு சென்று பக்கத்த இருந்து சாப்பிடுவர்களிடம் பணம் கறக்க முடியாது. தமது பினாமிகளை பப்பிளிக்காக சந்திக்க முடியாது. குழம்பி போயுள்ள சம்மந்தனும் சுமந்திரனும் இருக்கிற பணத்தை பங்கு போட்டிட்டினமாம்.

1 comments :

Alex Eravi April 10, 2014 at 7:02 AM  

Both 'S' know how to mesmerize the people...

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com