Tuesday, April 8, 2014

பொதுபல சேனாவினர் இன்று வில்பத்தில்....!

பொதுபலசேனா உறுப்பினர்கள் இன்று (8) செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு கொழும்பு கிருலப்பனையில் இருந்து வில்பத்து வனப் பிரதேசத்திற்கு செல்வதாக அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள், பொதுபலசேனா தேரர்கள், மற்றும் வன வள சம்பந்தப்பட்ட புத்திஜீவிகளையும் அழைத்துக் கொண்டு வில்பத்து செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விஜயம் சம்பந்தமாக பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி கலாநிதி திலக் விதானகே தகவல் தருகையில் -

“நாங்கள் அங்கு செல்வது ஆர்ப்பாட்டத்திற்கோ அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காகவோ அல்ல. இந்த நாட்டின் பண்டைய காலத்து சிங்கள மன்னன் விஜயன் காலத்தில் இருந்து பாதுகாத்து வந்த வில்பத்து வனாந்தர பிரதேசம் இந்த நாட்டின் ஒரு இயற்கை வள சொத்தாகும். இப்பிரதேசத்தினை அண்மைக்காலமாக சிலர் அழித்து குடியேறுகின்றனர். இங்கு எங்களது பௌத்த மத பழைமை வாய்ந்த கலாச்சாரச் சின்னங்கள் மற்றும் வன வளங்களை நாசப்படுத்துகின்றனர்.

இதனை பார்வையிடுவதற்கும் இது சம்பந்தமான உண்மையான நிலைகளை கண்டறிவதற்கே நாங்கள் அங்கு செல்கின்றோம். அதன் பின்னர் அரச மற்றும் எதிர்கட்சியினர்களுக்கும் மக்களுக்கு உண்மைநிலையை அறிவுறுத்தி இந்த வளங்களை பாதுகாப்பதற்கு முயற்சிஎடுப்போம். எனத் தெரிவித்தார்.

(அஸ்ரப் ஏ சமத்)

2 comments :

Anonymous ,  April 8, 2014 at 4:22 AM  

Ivanukku vera velai illaiya?

Anonymous ,  April 8, 2014 at 1:46 PM  

(Pandi Thinnum)Bootemkalukku (Punithe Islam) fattri enna Therrium?
Pandihal kaattil vaalvathal atai athihamaga tinnupavargalum eatho oru kaaranatthai sollikkondu saranalayam pakkam varuhiraargal

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com