Saturday, April 19, 2014

சவுதியில் பெண்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை

சவுதி அரபியாவில் அரசாட்சிக்கு எதிராக பெண்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை மேற்கொண்டவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. சவுதி அரேபியாவை அல் சவ்த் குடும்பம் ஆட்சி செய்து வருகிறது. இதனால், அங்கு அரசியல் கட்சிகள் செயல்பட மறுக்கப்பட்டு வருகிறது. மன்னர் ஆட்சியை எதிர்த்து போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசாட்சிக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டங்களை மேற்கொண்டவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், பெண்களை போராட்டதிற்காக ஒருங்கிணைத்த அபு அல் காதிர் என்றவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சவுதி அரேபியாவின் ரியாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள அபு அல் காதிர், அரசாட்சிக்கு எதிராக சர்வதே மனித உரிமை ஆணையத்தை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

முன்னதாக, மனித உரிமை ஆணையம் (ஆம்னெஸ்டி), அந்த அமைப்பின் சவுதி அரேபிய அதிகாரியான அபு அல் காதிரை எந்த ஒரு விளக்கமும் தராமல் கைது செய்தது தவறு என்று கூறி, அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வந்தது.

இதனிடையே, இந்தத் தீர்ப்பை சவுதி அரேபிய நீதி மன்றம் விதித்துள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com