Sunday, March 9, 2014

தமிழ் டைகர்ஸ் நூல் வெளியீடு! இலங்கை இராணுவத்தின் ஒழுக்க விழுமியங்கள் உலகிற்கு முன்னுதாரணம் - சரத்

உலகின் கொடிய பயங்கரவாதிகளை தோல்வியடையச் செய்வதில், இலங்கை இராணுவம் பின்பற்றிய ஒழுக்க விழுமியங்கள், மனிதாபிமான நடவடிக்கையின்போது, தெளிவாகியதுடன் உலகிற்கு முன்னுதாரணமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்த இராணுவ வீரர்களுக்கும், இதனை வழிநடாத்திய தலைவர்களுக்கும் எதிராக, மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுவதை, ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என, பிரதியமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் சிறுவர் போராளி என்ற வகையில் பெற்ற அனுபவங்கள், "தமிழ் டைகர்ஸ்" எனும் நூலினூடாக நிரோமி டி சொய்சா வெளியிட்டுள்ளார்.

எல்.ரி.ரி.ஈ இயக்கம், சிறுவர்களை பலாத்காரமாக இணைத்துக்கொண்டு, அவர்களின் கல்வி உட்பட சிறுவர் உரிமைகளை பறித்தெடுத்து, தற்கொலை குண்டுதாரிகளாக அவர்களை மாற்றியமைத்த விதம், இந்நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ் டைகர்ஸ் எனும் இந்த நூல், புலிகளின் புதல்வியொருவரின் கருத்துகளாக அமையும் வகையில், சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் சுனிலா விஜயசிங்க, மொழி பெயர்த்துள்ள இந்த நூல், பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது,

இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, பிரதியமைச்சர் சரத் வீரசேகர, இக்கருத்துகளை வெளியிட்டார். புலிகளின் உண்மையான வடிவத்தை, உலகிற்கு அம்பலப்படுத்த இந்த நூல் சிறந்த சான்றாகும். மகா சங்கத்தினர், புத்திஜீவிகள், கலைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர், இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com