Sunday, March 9, 2014

இங்கிருந்து எம்மை வேறெங்கும் எடுத்துச்செல்ல முடியாது. மின்சார கதிரைக்கு எடுத்துச்செல்லவும் முடியாது!

மக்களுக்கு தலைவணங்க நாம் தயார். எனினும் காலணி த்துவ வாதிகளுக்கோ, அவர்களது கைபொம்மைகளுக்கோ தலைசாய்க்க ஒருபோதும் தயாரில்லை. மக்களின் தீர்ப்பே, எமது நம்பிக்கை என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கம்பஹாவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின்போது, தெரிவித்தார்.

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம், கம்பஹா நகர சபை மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று பிற்பகல் ஆரம்பமாகியது. ஷமகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் வெற்றிகொள்வோம் எனும் தொனிப்பொருளில், அமைச்சர் பெசில் ராஜபக்ச, பிரதியமைச்சர் பண்டு பண்டாரநாயக ஆகியோர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கம்பஹா நகர மைதானத்தில் திரண்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, பெற்ற சுதந்திரத்தையும், சமாதானத்தையும் தாரை வார்த்து, காலணித்துவவாதிகளின் கைபொம்மைகளிடம் மண்டியிட, தான் தயாரில்லையென, தெரிவித்தார்.

30 ஆண்டுகால யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்தோம். அந்த முடிவின் பயனே, இந்த நாட்டின் அபிவிருத்தியாகும். அந்த முடிவின் மற்றைய பயன் தான், 6 மாதங்களுக்கு ஒரு தடவை ஜெனீவா சென்று பதிலளிக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகள் பற்றி எங்களிடம் வினவுகின்றார்கள். நாங்கள் மனித உரிமைகளை மீறிவிட்டோமாம். மக்களுக்கு வாழ்வதற்கு வழியமைப்பதை விட, வேறு என்னதான் மனித உரிமை இவர்களுக்கு தேவை. வாழ்வது ஒரு மனித உரிமையாகும்.

வாழ்வதற்கு வழியமைத்துக்கொடுப்பது ஒரு மனித உரிமையாகும். அன்று நாம் அச்சத்துடனும், பீதியுடனும் வாழ்ந்தோம். தெஹிவளையில் குண்டு வைக்கின்றார்கள், மத்திய வங்கி மீது தாக்குதல் நடாத்துகின்றார்கள், கெபிதிகொல்லாவையில் குண்டு வைக்கும்போது, முஸ்லிம் மக்களுக்கு தொழுகையை கூட நிம்மதியாக தொழ முடியாத வகையில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் காத்தான்குடியில் படுகொலை செய்யப்படும்போது, பள்ளிவாசலுக்கு உள்ளும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்கள். ஸ்ரீமகாபோதி மீதும் தாக்குதல் நடாத்தினார்கள்.

மதகுருமார் உட்பட யாத்திரையில் சென்றவர்களை படுகொலை செய்யும்போதும், தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதல் நடாத்தும்போது, முழு நாட்டிலும் குண்டுகள் வெடித்து, மக்கள் அநியாயமாக கொலை செய்யப்படும்போது, என்றுமே கிராமங்களில் வெள்ளைகொடி தொங்க விடப்படும்போது, இவற்றை நிறுத்தியது, ஒரு மனித உரிமை மீறலா? இது எமக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. நான் இந்த சர்வதேச தலைவர்களை சந்தித்தபோது, இதனை கூறினேன்.

மிக தெளிவாக நான் அவர்களுக்கு பதிலளித்திருந்தேன். நாம் இந்த நாட்டில் ஒருபோதும் மனித உரிமைகளை மீறவில்லை. அவற்றை நாம் பாதுகாத்தோம். இன்று எதிர்க்கட்சியின் சிலர், வந்து இவற்றுக்கு தீனி போடுகின்றார்கள். இந்த நாட்டில் பிறந்தவர்கள், எங்களுக்கு எதிராகவே இன்று பல்வேறு கருத்துகளை பரப்பி வருகின்றார்கள். இந்த நாட்டு மக்களின் கருத்துகளை மூடி மறைக்க முடியாது என்ற காரணத்தினால், இங்கு வெற்றிபெற முடியாவிட்டால், வெளிநாடு சென்றேனும் வெற்றிபெற வேண்டிய நிலைப்பாட்டில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

நாங்கள் ஒன்றை தெளிவாக கூறியிருக்கின்Nறூம். இங்கிருந்து எம்மை வேறெங்கும் எடுத்துச்செல்ல முடியாது. மின்சார கதிரைக்கு எடுத்துச்செல்லவும் முடியாது, வேறு எங்கும் எம்மை எடுத்துச்செல்ல முடியாது. இந்நாட்டிலிருந்து எங்களை வெளியேற்றக்கூடிய ஒரேயொரு பகுதியினர், இந்நாட்டு மக்களாவர். இந்த நாட்டு மக்களே இதற்கான சரியான தீர்ப்பை வழங்க முடியும்.

மனித உரிமைகள் ஸ்தாபனத்திற்கு அதனை வழங்க முடியாது. அது உங்கள் கரங்களில் உள்ள ஓர் தீர்ப்பாகும். அது பிழையென்று கூறினால், அதற்கு நாம் தலைசாய்க்க தயார். மக்களுக்கு தலைவணங்க நாம் தயார். ஆனால், காலணித்துவ வாதிகளுக்கோ அவர்களின் கைபொம்மைகளுக்கோ நாம் ஒருபோதும் தயாரில்லையென்பதை, கூறுகின்றோம். இந்த நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் மீது எமக்கு முழு அளவிலான நம்பிக்கை இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்

1 comments :

Arya ,  March 9, 2014 at 11:09 PM  

கெலம் மக்ரே , லண்டன் தமிழ் ரேடியோகள் , புலன் பெயர்ந்ததுகள் போன்ற CIA நபர்களும் ,CIA விடம் பணம் பெற்ற உள் நாட்டு மனோ கணேசன் , TNA , NGO கள் போன்றவர்களும் சேர்ந்தது உங்களை வீழ்த்த பெரும் முயற்சி செய்கிறார்கள் , இவர்களை வெற்றி கொண்டால் தான் நாட்டி மேலும் அபிவிருத்தி கொண்டு செல்ல முடியும். பயங்கர வாதத்தை வெற்றி கொண்டது போல் இதையும் வெடி கொள்ள வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com