Sunday, March 9, 2014

அவுஸ்திரேலியவில் புகலிடம் கோரியுள்ளவர்களில் அதிகமானவர்கள் இலங்கையர்கள்!

2012 – 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையர்களே அதிகளவில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறதுடன் குறித்த இந்த காலப்பகுதியில் 4949 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

அது மட்டும்லாமல் 2012 – 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மொத்தமாக 18,119 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக வுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2012-2013 ஆண்டு காலப்பகுதியில் முதலிடத்தில் இலங்கையும் தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் இடங்களை ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் வகிக்கின்றன.

2008-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 41 பேரும், 2009-2010 காலப்பகுதியில் 911 பேரும், 2010-2011 ஆண்டு காலப்பகுதியில் 362 பேரும், 2011-2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் 820 பேரும் புகலிடம் கோரியுள்ளனர்.

எனினும், 2012-2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் புகலிடம் கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை 4949 ஆக உயர்வடைந்துள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் 377 இலங்கையர்களுக்கு மட்டுமே புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com