Tuesday, March 4, 2014

கஞ்சா வைத்திருந்ததாகக்கூறி கைதுசெய்யப்பட்டது அரசியல் பழிவாங்கலே!

தன்னிடம் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட வில்கமுவ பிரதேச சபை உறுப்பினர் நேற்று (3) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவுல நீதவான் ஐ.பீ. முனசிங்க ஆணையிட்டார்.

வில்கமுவ பிரதேச சபையின் தலைவர் ஜயன்த வீரசேக்கரவே (ஐமசுமு) இவ்வாறு சிறையிலடைக்கப்பட்டார். அவருடன் முன்னாள் தலைவர் ரஞ்சித் குமாரசிங்க (ஐமசுமு) வும் சிறையிலடைக்கப்பட்டார்.

இவர்கள் இருவரும் பயணித்த, பிரதேச சபைக்கு உரித்தான கெப் வண்டிக்கு பிரத்தியேக வண்டிச் சில்லு பொருத்தும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த 365 கிராம் கஞ்சாவை பொலிஸார் சென்ற முதலாம் திகதி சந்தேகத்தின் பேரில் கைப்பற்றினர்.

வில்கமுவ பொலிஸார் சந்தேக நபர் இருவரையும் பீ அறிக்கையின்படி நீதிபதியின் முன் ஆஜர்படுத்தியதன்பின்னர், நீதிபதி இருவரையும் பிணையில் விடுதலை செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்குக் காரணம் பீ அறிக்கை பிணையில் விடுதலை செய்ய முடியும் எனக் குறிப்பிட்டிருந்தமையினாலேயே நீதிமன்றம் சங்கடத்திற்குள்ளானது.

தனிப்பட்ட குரோதங்கள் தொடர்பில் நீதிமன்றத்தை இழுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், பீ அறிக்கையை மீண்டும் சரிசெய்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் நீதிபதி பொலிஸாருக்கு ஆணையிட்டுள்ளார்.

சந்தேக நபர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் வசந்த ஏக்கநாயக்க, அரசியல் பழிவாங்கலின் பேரில் இது நிகழ்ந்திருக்கிறது என நீதிமன்றத்திடம் கருத்துரைக்கும்போது குறிப்பிட்டுள்ளார்.

சென்ற வாரம் வில்கமுவ தேசிய பூங்காவில் இரண்டு ஏக்கர்களுக்கு மேலாக இருந்த கஞ்சா சேனையை பொலிஸரின் உதவியுடன் அழித்துள்ளார் வில்கமுவ பிரதேச சபைத் தலைவர். கஞ்சாவுக்கெதிராக பிரதேசத்தவர்களுடன் ஒன்றிணைந்து தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவந்துள்ளார். அதனால் அவர் மீது கோபமுற்ற சிலரே இவ்வாறு செய்துள்ளனர்.

அவர் இதற்குமுன்பொருநாள், ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, வில்கமுவ தனமல்விலவாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச சபைத் தலைவரின் தந்தை, நீதிமன்ற முன்றலில் நின்றுகொண்டு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, தனது மகன் குறைந்தளவு ஒரு சிகரட் கூட புகைக்காதவர். இது அரசியல் பழிவாங்கல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி “அத” - கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com