Tuesday, March 4, 2014

புலிகளுக்கு எதிராக செயற்படாதது தொடர்பில் மனக்கவலைப்படுகிறார் பிள்ளை!

12000 புலி உறுப்பினர்களுக்கு புணர்வாழ்வளித்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு நன்றி சொல்கிறார்

போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினருக்கு எதிராக செயற்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை தொடர்பிலான ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறித்த அறிக்கை தொடர்பில் மனக்கவலை அடைந்துள்ளார்.

12000 இற்கும் அண்மித்த தொகை எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து, அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரமளித்தமை தொடர்பில் ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், புலிகளுக்கு எதிராக இலங்கை அரசினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையை பலம்பொருந்தியதாக உடனடியாக அனுப்பிவைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  March 4, 2014 at 4:02 AM  

nampa vaiththu kaluththaruppu

ஆர்யா ,  March 4, 2014 at 1:26 PM  

போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும், எப்படி எனில் , புலம்பெயர் நாடுகளில் அவர்கள் இப்போது வேறு உருவில் உள்ளார்கள், நாடு கடந்த அரசு , தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) , GTF, TYO, BTF என இன்னும் பல முகமூடிகளை அணிந்து உள்ளனர், இவர்கள் கைது செய்து உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்.
அத்துடன் பல பாரிய போர்க் குற்றங்களுடன் சித்திரவதைகளுடன் தொடர்புடைய பல முன்னால் புலி உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடுகளில் தலை மறைவாக உள்ளனர் அவர்களையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com