Thursday, March 20, 2014

நான் விருப்பு வாக்கு கேட்க மாட்டேன்! - ஹிருணிகா

“தான் ஒருபோதும் விருப்பு வாக்குக் கேட்க மாட்டேன் எனவும், தேங்காய் ஒன்றுக்கும், அரிசி கொஞ்சத்திற்கும் தனது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது” எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர அவிச்சாவளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் -

“எனக்கு தற்போது வயது 26. மகளுக்கு தந்தை இருக்க வேண்டும். தேவையான நேரத்தில்தான் என் தந்தை எனக்கு இல்லாமலானார். தந்தையோடு சேர்ந்து கொலை செய்யப்பட்ட அடுத்த மூவரினதும் குடும்பங்கள் அநாதையாகி விட்டன. இந்த நாசமாப்போன அரசியல் அவர்களை கொலைசெய்து விட்டன.

மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் கூட இல்லை. நீங்கள் இப்போது முடிவு செய்திருப்பீர்கள். தற்போதுள்ள அரசியல் பற்றிச் சிலவற்றை நான் சொல்லியாக வேண்டும்.

நான் விருப்பு வாக்கு கேட்க மாட்டேன். பொய் வாக்குறுதிகள் கொடுக்கவும் மாட்டேன். மாகாண சபையினுள்ளே செய்ய முடியுமான அனைத்தையும் செய்வேன்.

பிறிதொரு தேர்தல் தொகுதியிலிருந்து உங்களுக்காகவே வந்துள்ளேன். வாழும் உரிமை போன்று வாக்குரிமையையும் தேங்காய் ஒன்றுக்காக, கொஞ்சம் அரிசிக்காக பெருமதிமிக்க உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டாம்”

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 21, 2014 at 4:54 AM  

Better she act at a movie, than do politics, so cute.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com