Wednesday, March 5, 2014

எவரேனும் விபத்தில் சிக்கினால் உடனடிாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லுங்கள்- வவுனியா பொது வைத்தியசாலையின் அத்தியட்சகர்

எவரேனும் விபத்தில் சிக்கினால் அருகிலிருப்பவர்கள் உடனடியாக அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியகலாநிதி குலலிங்கம் அகிலேந்திரன் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற விபத்தொன்றில் ஆசிரியை ஒருவர் பலியானார் இவர், விபத்தில் சிக்கி பல மணித்தியாலங்களாக வீதியிலே கிடந்துள்ளார்.

நீண்ட நேரத்திற்குபின் வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின்பு அவர் உயிரிழந்தார் இது ஒரு துர்ப்பாக்கியமான நிலைமயாகும் இன்று அவ் ஆசிரியையினுடைய குழந்தையின் எதிர்காலத்தையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது. 

விபத்தில் சிக்கியவர்களை அவ்விடத்திலேயே விட்டு சென்றால் அது சிலவேளைகளில் உயிரிழப்பாக போய்விடும் எனவே விபத்தில் சிக்கியவர்களை எவரேனும் கண்டால் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயலவேண்டும் அல்லது அதற்கு சாதகமான நிலை ஏற்படாத பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அறிவித்தலை வழங்குங்கள்.

எனவே இவ்வாறான சம்பவங்களை இனிவரும் காலத்தில் இல்லாது செய்வதற்கு மக்கள் முன்வரவேண்டும் எனக்குறிப்பிட்டார் மேலும் சிலர் சட்ட சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதனால் விபத்தில் சிக்கியவர்களை அவ்விடத்திலேயே விட்டு செல்கின்றனர் எனவே அதன் காரணமாக விபத்தில் சிக்கியவர்களை கொண்டு வரும் நபர்களுக்கு நாம் சட்ட சிக்கல்களை குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com