Monday, March 3, 2014

யாழில்.பால் கொள்வனவு செய்யும் இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் பசு மாடுகள் வைத்திருப்பவார்களுக்கு கூடுதல் இலாபம் கிடைக்கும் வகையில், அவர்களின் தயாரிப்புக்கள் கூடுதல் விலைக்கு வாங்கும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ். பாதுகாப்பு தலைமையகத்தின் ஊடகப் பிரிவு ஊடகச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.


அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் பசு மாடுகள் வைத்திருப்பவார்களுக்கு கூடுதல் இலாபம் கிடைக்கும் வகையில், அவர்களின் தயாரிப்புக்களை கூடுதல் விலைக்கு வாங்கும் வேலைத் திட்டம் ஒன்றை யாழ். பாதுகாப்பு படைத் தலமையகம் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா அவர்களின் யோசனையின் படி ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக யாழ்.காங்கேசன்துறை 05 ஆவது இலங்கை இராணுவ பொது சேவைகள் பிரிவினால் பிப்ரவரி 13ஆம் தேதியில் இருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இது மட்டும்ல்லாது சுதுமலை, இணுவில் மற்றும் பொன்னாலை பகுதிகளிலும் பசு மாடு வைத்திருப்பவர்களின் தயாரிப்புக்கள் இராணுவத்தினரால் 03 இடங்களில் வைத்து ஒவ்வொரு நாளும் விலைக்கு வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் உள்ளவரகள் இதற்கு முன்னர் 01 லிட்டர் பால் 48 ரூபாய்க்கு விற்பனை செய்யதனர் எனினும் இராணுவத்தினர் ஒரு லிட்டர் பாலை 60 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசு மாடுகள் வைத்திருப்பவர்களின் வருமானம் பூர்த்தியடையும் வகையில், அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் உயர்வடையும் வகையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டும்லாது இப்படி விலைக்கு வாங்கும் பால்கள் இராணுவத்தினருக்கும் மற்றும் இராணுவத்தினரின் தேவைக்கு தேவைப்பாடும் யோகர்ட் தயாரிப்பதற்கு பயன்படுத்த இராணுவ பொது சேவை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com