Monday, March 3, 2014

பேர்லினில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 66 வது சுதந்திரதினம்.

பேர்லினிலுள்ள இலங்கைத்தூதரகம் பெப்ருவரி 04 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட வைபவமொன்றுடனும் பெப்ருவரி 08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட வரவேற்பு ஒன்றுடனும் இந்த ஆண்டின் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது.

பெப்புருவரி 04 ஆம் திகதியன்று தேசிய விழா தேசிய கொடியானது மகுல்பெர பேரிகை முழக்கத்துடனும் தேசிய கீதத்தின் இசைத்தலுடனும் தூதுவரினால் ஏற்றப்பட்டதுடன் உத்தியோகபூர்வ வைபவம் ஆரம்ப்பிக்கப்பட்டது. தாய்நாட்டின் சுதந்திரத்தையும், ஐக்கியத்தையும் இறைமையையும் ஆள்புலக் கீர்த்தியையும் பேணுவதற்கும் பாதுகாப்பதற்குமாக தங்களுடைய உயிர்களை தியாகம் செய்த சகல போர் வீரர்களுக்கும் மக்களுக்கும் கௌரவமளிப்பதன் பொருட்டு 2 நிமிட மௌன நிலை அனுட்டிக்கப்பட்டது. தூதுவர் அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேசிய தின செய்தியை வாசித்தார்.

பெப்புருவரி 09 ஆம் திகதியன்று தூதரகத்தில் வரவேற்பொன்று அளிக்கப்பட்டது. இலங்கை சமூகத்தினதும் இலங்கை நண்பர்களினதும் சஞ்சிகையாளர்களினதும் கலைஞர்களினதும் 150 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். இந்த வரவேற்பு பாரம்பரிய எண்ணெய் தீபம் ஏற்றுதலுடன் திறக்கப்பட்டது. பௌத்த, இந்து, கிறிஸ்தவ , முஸ்லிம் சமயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்தந்த சமயத் தலைவர்களும் இந்த விழாவில் பங்குபற்றினர் அதேவேளை அவர்களுடைய நாட்டிற்கான ஆசீர்வாதத்துடன் மக்கள் சமய அனுட்டானங்களை அனுட்டித்துள்ளனர். அதிமேதகு சனாதிபதி, மாண்புமிகு பிரதமர், மாண்பு மிகு வெளிவிவகார அமைச்சர் ஆகியோர்களின் தேசிய தினச் செய்திகள் முறையே சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வாசிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் உரைநிகழ்த்திய தூதுவர் சரத் கொங்காகே அதிமேதகு சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் படைகளினால் புரியப்பட்ட தியாகங்கள் இந்த நாடு உண்மையான சுந்திரத்தை அடைவதற்கு வழிவகுத்துள்ளது எனக் குறிப்பிட்டார். அத்துடன் அவர் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக சகலரும் கடுமையாக பணியாற்ற வேண்டியது அனைவரினதும் தலையாய கடமையாகும் என்பதை ஞாபகப்படுத்தினார்.

தூதுவர் தூதரகத்தில் நடாத்தப்பட்ட சுதந்திர தின வைபவத்தில் குறிப்பிடத்தக்க அமிசமொன்றை தாம் அவதானித்துள்ளதாக குறிப்பிட்டார். அதாவது ஒவ்வொரு ஆண்டிலும் தூதரகத்தின் முன் ஓர் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டதாகவும் இவ்வாண்டு ஆர்ப்பாட்டம் எதுவும் நடாத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டு இது ஜெர்மனியில் வசிக்கின்ற தமிழர்களின் மனமாற்றத்தை காண்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் கூடுதலாக 'தமிழர்கள் உண்மையை புரிந்துகொண்டுள்ளமை பற்றியும் அவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் சார்பானவர்களின் கூற்றுக்களை செவிமடுப்பதற்கு விரும்பவில்லை என்பதையும் அவதானிப்பதில் நான் உண்மையிலேயே பெரு மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் தங்களுடைய வாழ்க்கையை நிலை நிறுத்துவதிலும் தங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வியூட்டுவதிலும் தாய் நாட்டிற்கு வருகை புரிவதிலும் தீவிரமாக ஈடுபாடுகாட்டுகின்றனர். இது வெளிநாடுகளில் வசிக்கின்ற தமிழர்களுக்கு ஒரு முன்மாதிரியான ' எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தூதரகமானது தமிழர்களின் தேவைப்பாடுகளான கடவுச்சீட்டு விண்ணப்பங்களையும் பிறப்பு, இறப்பு, திருமணங்களின் பதிவுகளையும் சீர்முறைப்படுத்தும் பணியை உரிய காலத்தில் செய்மையாக மேற்கொள்ளுகின்றதுடன் அவர்களுக்கு தமிழ் மொழி கற்கும் நூல்களையும் வழங்குவதாகவும் தூதர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைபவத்தின் பின்னர் விருந்தாளிகள் இலங்கையின் பாராம்பரிய உணவு வகைகளைக் கொண்ட இராப்போசனம் வழங்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.








1 comments :

Anonymous ,  March 3, 2014 at 11:16 PM  

Very nice, keep it up!
We are Lankans! Never to be a EALAMS!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com